Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டு வா சுஜித் – மாநிலம் முழுவதும் பிரார்த்தனை….!!

சிறுவன் சுஜித்தை காப்பாற்ற மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது.

மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 50 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இறைவன் கருணையால் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்தனர். அதேபோல், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள சாலை மாரியம்மன் கோயிலிலும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

Categories

Tech |