வெளிமாநிலத்திற்கு சென்று 48 மணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டால் அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டிய நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகப்பு மண்டல பகுதிகளில் மட்டும் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப் பட உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வருகின்ற ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப் பட உள்ளது. இந்நிலையில் தொழில் ரீதியாக வெளி மாநிலங்களுக்கு, வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர்களை அனுமதிக்கலாம் எனவும், அப்படி சொல்பவர்கள் 48 மணி நேரத்தில் திரும்ப வருபவர்களாக இருந்தால், அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம்.
வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினால் போதும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தொழில் ரீதியாக செல்பவர்களுக்கு எந்த தடையும் இல்லை ஆனால் அந்தந்த மாநிலத்திலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதால், கட்டாயம் இ பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.