பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் தீபாளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அதில் அவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்தது. ஆளும் அதிமுக , பாஜகவை கடுமையாக சாடி இருந்தார்.குறிப்பாக விஜய் அட்லி கூட்டணியில் முன்னதாக வெளிவந்த மெர்சல் படத்தில் GST தொடர்பான வசனங்கள் இடம்பெற்றதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதை தொடர்ந்து இறுதியாக வெளிவந்த சர்க்கார் படத்தில் அதிமுகவை அவமதிப்பதாக இருக்கின்றது என்று ஆளும் அதிமுகவினர் விஜய் பட கட்டவுட் என அனைத்தையும் கிழித்து எறிந்தனர். இந்த இரண்டு சம்பவத்திற்கும் பாடம் புகட்டும் வகையில் அதிமுகவையும் , பாஜகவையும் பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கிழித்து தொங்கவிட்டார்.
குறிப்பாக அதிமுக நிர்வாகி பேனர் வைத்ததால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் குறித்து பேசிய விஜய் யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று சாடியதோடு இல்லாமல், எதிரியா இருந்தாலும் மதிக்கணும், ஒருமுறை எம்ஜிஆரிடம் கலைஞர் குறித்து தவறாக பேசிய் அமைச்சரை வெளியே போ’ என எம்ஜிஆர் கூறினார் என்று நேரடியாக அதிமுகவை வெளுத்தார்.
அதோடு நின்று விடாத விஜய் என் படத்தை உடையுங்கள் , பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர் மீது கைவைக்காதீர்கள் என்று எச்சரித்ததோடு , இதற்க்கு எல்லாம் ஆணி வேறாக இருக்கும் மத்திய அரசை நோக்கி பாய்ந்தார். அப்போது பேசிய விஜய் , எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்கே உட்கார வச்சிங்கன்னா, எல்லாம் கரெக்டா இருக்கும் என்று மத்திய ஆட்சியாளர்களை சரியாக தேர்வு செய்தால் இவர்கள் அடங்கி விடுவார்கள் என்று சூசகமாக எச்சரித்தார்.
நடிகர் விஜயின் இந்த பேச்சு ஆளும் அதிமுக , மத்திய பாஜகவை கடுமையாக சீண்டியுள்ளது. ஏற்கனவே புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் நடிகர் சூர்யா மத்திய , மாநில அரசை எச்சரித்த நிலையில் தற்போது நடிகர் விஜய்_யும் எச்சரித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.