ஹோட்டல் மேல் கொண்ட ஆர்வத்தினால் சந்தோஷ் பிரதாப் சின்னக் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார்.
இவர்கள் ஹோட்டல் நல்ல முறையில் செல்ல இது தாதாவான மதுசூதனன் கண்ணை உறுத்த ஹோட்டலை பறிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அது நடக்காத நிலையில் ஹோட்டலின் வளர்ச்சி உயரத்தை எட்டியது. தத்தெடுத்து வளர்க்கும் மகன்களை பிரித்து விடுவார் என சந்தோஷ் தனது காதலியான அர்ச்சனாவையும் ஒதுக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் மகன்களுக்காக வாழ்கிறார் சந்தோஷ்.
ஆனால் மகன்களோ தந்தையிடமிருந்து சொத்தை பறித்துக்கொண்டு சந்தோசை நடுரோட்டில் விடுகின்றனர். மகன்கள் செய்த துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் இதுவரை காட்டாத வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டியுள்ளார். இளவயதில் இருக்கும் சுறுசுறுப்பு தன்மையும் முதுமையில் இருக்கும் பொறுமையையும் ஒருசேர காட்டியுள்ளார் சந்தோஷ்.
நாயகியாக வரும் அர்ச்சனா துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாபாத்திரத்தையும் திடீரென்று மாற்றம் கொள்வதையும் வெகுவாக சிறந்த அளவில் செய்துள்ளார். கஞ்சா கருப்பு அவர்கள் படத்தை கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார்.
மகன்களை நம்பும் பெற்றோர்களுக்கு ஏற்படும் நிலைமையை இப்படம் மூலம் கூறியிருக்கிறார் இயக்குனர். சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான படமாகவே இரும்பு மனிதன் படம் அமைந்திருக்கும்.