பாரம் – விமர்சனம்
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கருப்பசாமி. 60 வயது தாண்டிய இவர் விபத்து ஒன்றில் சிக்கி அவரது இடுப்பு எலும்பு உடைந்து போகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதித்த பொழுது மருத்துவர்கள் ஆபரேஷன் செய்தால் குணமாகிவிடும் என கூறியுள்ளனர். ஆனால் கருப்புசாமி மகனோ செலவை எண்ணி ஆபரேஷனுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
வலியால் துடித்த தந்தைக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டார்.இந்நிலையில் கருப்புசாமி திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக கருப்பசாமியின் மருமகன் அதாவது கருப்பசாமியின் சகோதரியின் மகன் காவல்நிலையத்திலும் பத்திரிக்கை நிபுணர்களிடமும் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்பட்டு அமைச்சர் ஒருவரின் சிபாரிசில் கருப்பசாமி இறப்பில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என வழக்கை முடித்து விடுகின்றனர். ஆனால் பத்திரிகையாளர்கள் துப்பறிந்து கருப்பசாமியின் மகன் தந்தைக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனரா? அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ராஜு கருப்புசாமியாக ஒரு முதியவரின் வலியையும் வேதனையையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவரைப்போலவே கருப்பசாமி என் மகன் மற்றும் மருமகன் ஒப்பனை எதுவுமின்றி இயல்பான நடிப்பை வெளிக்காட்டி உள்ளனர்.
இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி கிராமப் பகுதிகளில் நடக்கும் தலைசுற்றல் என்ற பெயரில் பிள்ளைகளே பெற்றோர்களை கொல்லப்படும் தகவலை இப்படத்தில் விரிவாகக் கூறியுள்ளார் இசையமைப்பாளர் நாயர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் அவர்களது பங்களிப்பை சிறந்த அளவில் கொடுத்துள்ளனர்