Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அரசியலை கற்பிக்க வரும் “கல்தா” – விமர்சனம்

தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார்.

இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன ஆனார்? கிராம மக்கள் போராடினார்களா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை. படத்தில் கதாநாயகனாக  அறிமுகமாகியிருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நாயகன் போல் இல்லாமல் சண்டைக் காட்சிகளிலும் நடனங்களிலும் முழு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகியாக ஐரா தனது நடிப்பை சிறந்த அளவில் வெளிப்படுத்தியுள்ளார். ஆண்டனியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளது. அனுபவப்பூர்வமான நடிப்பால் கஜராஜ் கைத்தட்டல் வாங்கியுள்ளார்.

கிராமப்புறங்களில் கழிவுகளை  கொட்டுவதால் ஏற்படும் தீமைகளையும், பணத்திற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளையும் அழுத்தமாகச் கூறியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.  மொத்தத்தில் அரசியலை கற்பிக்கும் படமாக “கல்தா”

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |