Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

புரட்சி படைத்த முதல்வர்…. துணை நின்ற புதல்வர்…. நடிகர் சூரி வாழ்த்து…!!!

நகைச்சுவை நடிகர் சூரி திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “புரட்சி படைத்த முதல்வருக்கும், துணை நின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |