கடந்த செப்டம்பர் மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கொரியன் இணையதள தொடரை விற்பனை செய்த நபருக்கும், அதனை வாங்கிய பள்ளி மாணவருக்கும் வட கொரிய அரசாங்கம் அதிரடியான தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஸ்க்விட் கேம் இணையத்தள தொடர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள ஸ்க்விட் கேம் என்னும் இணையதள தொடரை பள்ளி மாணவர் ஒருவருக்கு வடகொரியாவை சேர்ந்த நபர் யுஎஸ்பி ட்ரைவின் மூலம் விற்பனை செய்துள்ளார்.
அவ்வாறு வட கொரியாவை சேர்ந்த நபர் ஸ்க்விட் கேமை யுஎஸ்பி டிரைவின் மூலம் விற்பனை செய்ததை அந்த பள்ளி மாணவன் வகுப்பறையில் வைத்து தன்னுடைய நண்பர்களுடன் பார்த்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த வடகொரிய அரசாங்கம் ஸ்க்விட் கேமை யுஎஸ்பி டிரைவின் மூலம் பள்ளி மாணவருக்கு விற்பனை செய்த நபருக்கு மரண தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி ஸ்க்விட் கேமை யுஎஸ்பி ட்ரைவின் வாங்கிய பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.