துருக்கியில் ஜனாதிபதி வெட்டவிருந்த சுரங்கப்பாதை திறப்பு விழாவின் ரிப்பனை அங்கிருந்து சிறுவன் ஒருவன் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கியில் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கான திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக அந்நாட்டின் ஜனாதிபதி சுரங்கப்பாதை கட்டப்பட்ட இடத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன் ஜனாதிபதி வெட்ட விருந்த ரிப்பனை அவசரப்பட்டு வெட்டியுள்ளார்.
அதன்பின்பு அந்த சிறுவன் வெட்டிய ரிப்பனை இழுத்துப் பிடித்து மீண்டும் ஒட்ட வைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்நாட்டின் ஜனாதிபதி அந்த சிறுவனின் தலையை தட்டி கொண்டு அவனிடம் ஏதோ ஒன்றை பேசுகிறார். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.