அரிசி ஆலை ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர்பகுதியில் செந்தில்குமார் என்ற அரிசி ஆலை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக காசநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனைவின் சிகிச்சைக்காக செந்தில்குமார் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
இதனை அடுத்து அந்த கடன் தொகையை செந்தில்குமாரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.