உருளைக்கிழங்கு சாதம்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு 4
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 5
உளுத்தம் பருப்பு 1/2 டேபிள்ஸ்பூன்
பூண்டு 4
மஞ்சள் தூள் சிறிதளவு
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் 1 டேபிள்ஸ்பூன்
சாதம் 2 கப்
வத்தல் 4
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வத்தல் பூண்டு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் பொடி நன்றாக வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு போட்டு நன்றாக கிளறவும்.
- பச்சை வாசனை போனவுடன் பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து சாதத்தையும் போட்டு நன்றாகக் கிளறி விடவும்.
- சிறிது நேரம் காத்திருந்து பின் சாதத்தை இறக்கிவிடவும்.
- இறுதியாக உப்பு கருவேப்பிலை தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிண்டி விடவும்.
- உருளைக்கிழங்கு சாதம் இப்போது தயார்