Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் அரிசி இறக்குமதிக்கு அனுமதி…. இந்தியாவில் 10% உயர்ந்த அரிசி விலை…!!!

வங்கதேச அரசாங்கம், அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருப்பதை தொடர்ந்து இந்தியாவில் அரிசி விலை 10% உயர்ந்திருக்கிறது.

வங்கதேச அரசாங்கம் பாசுமதி வகை இல்லாத அரிசியை கடந்த 22ம் தேதியில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கியது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் தான்  வங்கதேசத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

ஆனால், மழை வெள்ளம் காரணமாக உள்நாட்டு உற்பத்தி அங்கு குறைந்து விட்டது. எனவே, முன்பாகவே அரசி இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, வங்கதேசத்திற்கு அருகில் இருக்கும் மேற்குவங்கத்தில் அரிசி விலை 20 சதவீதமும், மற்ற இடங்களில் 10 சதவீதமும் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |