Categories
உலக செய்திகள்

“இதில் கூட ஏற்ற தாழ்வு!”.. பணக்கார நாட்டு மக்கள் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள்..!!

கொரோனா தடுப்பூசி பெறுவதில், பணக்கார நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்பதை அனைவரும் அறிந்துவிட்டனர். எனவே தடுப்பூசி செலுத்தினால் தான் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறது.

இதனால் அனைத்து நாடுகளும் போட்டி போட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் தடுப்பூசிகளை அதிகமாக பெற்றுவிடுகின்றன. எனவே அமெரிக்க அரசிடம் பல ஏழை நாடுகள் தடுப்பூசிக்காக கெஞ்சி வருகிறது. அமெரிக்காவிலிருந்து சிறிது நேரத்தில் செல்லக்கூடிய ஹைதி நாட்டிற்கே பல மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தான் 5 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கிறது.

கனடா அரசு, தங்கள் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பத்து தடுப்பூசிகள் என்ற வீதத்தில் இருப்பு வைத்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்காக தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய திட்டம் ஏற்படுத்தப்படும் பலனில்லாமல் போனது. மேலும் வளர்ச்சி அடைந்த நாடுகள் தடுப்பூசி திட்டத்தை இளைஞர்கள், சிறுவர்கள் என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் சுகாதார அதிகாரிகள் மீதமுள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு இலவசமாக அளிக்க வலியுறுத்துகிறார்கள். எனினும் கூடுதல் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தலாமா? என்ற விவாதத்தை அந்த நாடுகள் தொடங்கியிருக்கிறது. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் எளிதில் கொரோனா பரவக்கூடிய நிலையில் இருக்கும் மக்களுக்கு கூட முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது.

Categories

Tech |