நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி டிரைவரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள ராமதேவம் பகுதியில் கோட்டை அம்மாள் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டை அம்மாள் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோட்டை அம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் வைத்திருந்த 77,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. மேலும் நல்லூர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரிக் வண்டி டிரைவர் தினேஷ் என்பவர் திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 77,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.