சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது அலாஸ்கா பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நாட்டிலுள்ள அலாஸ்கா கடற்கரை ஓரங்களில் அந்நாட்டின் உள்ளூர் நேரமான 10.15 மணிக்கு நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அலாஸ்காவின் பெர்ரிவில் என்ற பகுதியிலிருந்து 91 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 11 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை கூறியுள்ளது. மேலும் இந்த நிலடுக்கத்தினால் பசிபிக் பகுதியை சுற்றியுள்ள குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளுக்கு USGS யினால் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.