Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருடன் ஹெல்மெட் இல்லாமல் ரைடு…. அத்துமீறிய போலீஸ் மகன், மன்னித்துவிட்ட காவல்துறை…. ஆவேசத்தில் பொதுமக்கள்…!!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் காவல்துறையை  ஆபாசமாக பேசிய நிலையிலும் அவனை மட்டும் மன்னித்துவிட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 3 பேரை அமர வைத்து ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது தனது பெயர் சுதாகர் என்றும் முன்னாள் எஸ்ஐ அன்புவின் மகன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் காவல்துறையினரை பேசியுள்ளார்.

Image result for வாகன பரிசோதனை

ராயபுரம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற பொழுது அவதூறாக பேசியுள்ளார். தகவலறிந்து வந்த தந்தை காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று போக்குவரத்து விதிமுறைகளை கூறி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் மகன் என்பதால் அவனை மட்டும் மன்னித்துவிடீர்கள் சாமான்ய மக்களாக இருந்த இப்படி நடந்து இருக்குமா என்று சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |