Categories
அரசியல் மாநில செய்திகள்

ரைட்& லெப்ட் ரொம்ப பலமா இருக்கு…. அப்போ யாரும் என்னிடம் கேட்கல…. பொங்கி எழுந்த குஷ்பு …!!

நான் பெரியாரிஸ்ட் தான் என்று காங்கிராஸில் விலகி பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க படுவதாக அறிவிக்கப் பட்டார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கடிதம் கொடுத்தார்.இந்த நிலையில் நேற்று பாஜகவின் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்த சரவணன், ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் இணைந்துள்ளனர்.

ரைட் அண்ட் லெப்ட் ரொம்ப பலமா இருக்கு. ஒருவர் ஊடகவியலாளர், இன்னொருவர் முழுவதும்  வேறுபட்ட பின்புலத்தில் இருந்து வந்தவர்.  அப்படி இருந்தாலும் எல்லாமே இந்த நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு கண்டிப்பாக வரவேண்டும். தாமரையை ஒவ்வொரு தெருவிலும் மலரவேண்டும் அப்படிங்கிற ஆசையில்தான் நாங்க இங்கே வந்துள்ளோம். மாற்றங்கள் இருக்கலாம்,  மாற்றங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. கொள்கைதான் மாறக்கூடாது,  மக்களுக்கு நல்லது செய்யனும்  என்பதுதான் என்னுடைய கொள்கை.

நான் பெரியாரிஸ்ட் என்ற கேள்வியை காங்கிரஸில் இருக்கும் யாரும் கேட்கவில்லையே. பெரியார் காங்கிரசை எதிர்த்தவர். நான் காங்கிரசில் இருக்கும்போது ஏன் யாரும் என்னிடம் அந்த கேள்வி கேட்கவில்லை. நான்  பெரியாரிஸ்ட் என்று சொல்லுகிறேன். பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன். அவருடைய ஒவ்வொரு கொள்கைக்கும் தலையாட்டிக் கொண்டு செல்ல முடியாது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், தலித் மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கும் அவர் குரல் கொடுத்தார் அதனால்தான் என்னை பெரியாரிஸ்ட் என்று சொல்கின்றேன். பாஜகவிலும் அதைத்தான் செய்கிறார்கள். பாஜகவில் தலித் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், பெண்களுக்கு எதிராக எந்த ஒரு பிரச்சினையும் நடக்க கூடாது என்றுதான் பாடுபடுகிறது.

Categories

Tech |