நடிகர் ரியோவில் “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்று மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அந்த வரிசையில் ரியோ நடித்துள்ள “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ரியோவிற்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
மேலும் பாலா சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவையான பொழுதுபோக்கு நிறைந்த இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.