பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரேஷ் ராவல் பிரச்சாரத்தின் போது வாக்காளிகள் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இவர் மீது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில் பரேஷ் ராவல் பேச்சு வங்காள மக்களிடம் கலவரத்தைத் தூண்டி சமூக நல்லினக்கத்தை கெடுக்கும் வகையில் இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் படி காவல்துறையினர் பரேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.