Categories
சினிமா தமிழ் சினிமா

“Rip அப்பா”…. வெங்கடேஷ் மறைவிற்கு பாண்டியன் ஸ்டோர் நடிகரின் உருக்கமான பதிவு…!!

வெங்கடேஷ் மறைவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் உருக்கமான பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பதே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள்தான். அதிலும் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு பல சின்னத்திரை பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் குமரன் தங்கராஜனும் வெங்கடேஷ் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் சேர்ந்து பணியாற்றிய சிறந்த நடிகர்களுள் இவரும் ஒருவர். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. RIP அப்பா என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |