Categories
Tech டெக்னாலஜி

“RIP TWITTER”…. தெறிக்கவிடும் மீம்ஸ்….. இப்படி செமயா கலாய்க்கிறாராம்….. மஸ்கின் சேட்டைய பாத்தீங்களா….!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது, தனக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது,‌‌ ப்ளூ‌ டிக் வசதிக்கு கட்டணம் என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பல ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

இதே நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால் விரைவில் டுவிட்டர் நிறுவனத்தை மூட வேண்டும் என்று வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதன் காரணமாக தற்போது உலகம் முழுவதும் ‌RIP TWITTER என்ற ஹேஷ்டே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி எலான் மஸ்க்கை பலரும் கேலி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டரில் ஒரு கேலியான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஒருவர் கல்லறையில் முன் அமர்ந்து கொண்டே 2 விரல்களை காட்டுகிறார். அந்த நபரின் முகத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவை வைத்துள்ளார். அதன் பிறகு கல்லறையிலும் twitter நிறுவனத்தின் லோகோவை வைத்துள்ளார். அதாவது விரல் காட்டும் நபர் எலான் மஸ்க் என்றும், கல்லறை டுவிட்டர் என்றும் மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்ந்துள்ளார். மேலும் எலான் மஸ்க் பகிர்ந்த மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |