Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…. கல்வியில் சிறப்பு… அந்தஸ்து உயரும்…!!

ரிஷப ராசி அன்பர்களே…!! அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் இன்று உதிரிகள் ஆவார்கள்.  பயணங்கள் பலன் தரும். ஆதாயம் இன்று சிறப்பாக தான் இருக்கும். கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று பிள்ளைகள் கல்விக்கான செலவு கூடும். இருந்தாலும் தேவையானவற்றை வாங்கி தருவீர்கள். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். வீண் விவாதங்களை விட்டு விலகிச் செல்வது ரொம்ப நல்லது. இன்று கல்வியில் மாணவர்களுக்கு தேர்ச்சி ஏற்படும். விளையாட்டு துறையிலும் மற்றும் அனைத்து துறைகளிலுமே மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும், முடிந்தால்  இன்று ஆலயம் சென்று வாருங்கள். மேலும் மனம் நிம்மதியாக காணப்படும்.

இன்று முக்கிய பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கரும் பச்சை நிறம்

Categories

Tech |