ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று இடம் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும் நாளாக இருக்கும். திடீர் பயணம், ஒன்றாக தித்திக்கும் செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர் ஒருவரின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். தொழில் போட்டிகளை சமாளிக்க கூடும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடி சரிசெய்வதால் ஓரளவு வளர்ச்சி ஏற்படும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள்.
இன்று குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையே நிதானப் போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவது நன்மையை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும்.
தந்தையிடம் கொஞ்சம் வாக்குவாதங்கள் இல்லாமல் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை இல்லத்தில் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லதாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் இளம் நீல நிறம்