ரிஷபம் ராசி நேயர்களே …! இன்று குடும்பச்சுமை கூடும் நாளாகவே இருக்கும். வரவைக் காட்டிலும் செலவு தான் அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்று எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் பிறக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று எதை செய்கின்றோம் என்று கொஞ்சம் கவனத்துடன் செய்தால் ரொம்ப நல்லது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது எப்பொழுதுமே சிறப்பு. வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேசுங்கள். அன்பாக நடந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக அக்கம்பக்கத்தினர் இடம் வாக்குவாதங்கள் இல்லாமல் செயல்படுங்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவே சிறப்பை கொடுக்கும்.
உடல் ஆரோக்கியமும் ஓரளவுதான் சிறப்பை கொடுக்கும். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்