ரிஷபம் ராசி அன்பர்களே …!! இன்று காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத அளவில் தன லாபம் இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாமா என்ற எண்ணங்கள் மேலோங்கும். இருந்தாலும் சேமிப்பதற்கு மட்டும் இப்போதைக்கு முயற்சியை மேற்கொள்ளுங்கள். வரவேண்டிய பழைய பாக்கிகள் நீங்கள் கேட்காமலேயே வந்துசேரும்.
அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி இன்று மாறுதல்கள் இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறக்கூடும். இதுவரை சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முடிவை கொடுக்கும். சொத்துப் பிரச்சனைகள் கூட இன்று நல்ல முடிவை கொடுக்கும். பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும்.
காதலர்களுக்கும் இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். இன்று முக்கியமானபணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்