Categories
ஆன்மிகம் ராசிபலன்

ரிஷப ராசிக்கு… நிதானம் தேவை…. இதில் கவனம் அவசியம்…!!

ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ராசியில் சந்திராஷ்டரமம் இருப்பதால் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனமாக தான் இருக்கவேண்டும். கணவன் மனைவிக்கு இடையே பூசல்கள் இருக்கும் பேசும் போது நிதானமாக பேசுங்கள். நிதி நெருக்கடி ஏற்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இறை வழிபாட்டில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் திரும்பி வந்து சேரும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும்.

மதியத்திற்கு மேல் சில விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். எதிலும்  எச்சரிக்கையாகவே நீங்கள் செயல்படுங்கள். அடுத்தவரிடம் பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடியுங்கள். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் இருக்கும். அவர்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களின் நல்லதுக்காக நீங்கள் பாடு பட்டாலும் அது இன்று எடுபடாமல் போகும். சமூகத்தில் ஓரளவு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் கவலையில்லை. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டி இருக்கும்.

யாருக்கும் வாக்குறுதி  கொடுக்காதீர்கள். ஜாமீன் எதுவும் போடாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவே செல்லுங்கள். காதலர்களுக்கு  இன்றைய நாள் ஓரளவு  சிறப்பான நாளாக இருக்கும். பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால்  எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |