Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு “தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்”… பொறுமையை கையாண்டால் சிறப்பான பலன்…!!!

ரிஷப ராசி அன்பர்களே….!!!  இன்று உங்கள் எதிரிகளின் பலம் கூடும் நாளாக இருக்கும். லாபம் வருவதில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று குடும்பத்தில் கருத்துவேறுபாடு அவ்வப்போது வந்து செல்லும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் அதிகமாகவே இருக்கும். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது சிறப்பு.பொருள் வரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று போதுமான வரை நீங்கள் பொறுமையை கையால்வது சிறப்பு.

முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும். மற்றவர்கள் பார்வையில் படும் படி நீங்கள் பணத்தை எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் இன்று கொஞ்சம் மந்தமாகவே நடக்கும். தனவரவு கிடைப்பதில் காலதாமதம் பிடிக்கும். அதேபோல் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அந்தப் பயணம் ஓரளவு அலைச்சலை கொடுக்கக்கூடிய பயணமாக இருக்கும். கூடுமானவரை பொறுமையை மட்டும் நீங்கள் கையாண்டால் தான் சிறப்பான பலனை நீங்கள் பெற முடியும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று கட்டாயமாக சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாகவே அமையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |