Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”வெற்றிகள் வீடு தேடி வரும்”….. எதிர்பாலினத்தவரிடம் எச்சரிக்கை…..!!!

ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று வெற்றிகள் வீடு தேடி வரும் சூழல் இருக்கு.  உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உறவினர் பகை மாறும். இன்று கலைத்துறையினருக்கு கவனம் இருக்கட்டும். எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்யுங்கள்.எதிர்பாலினத்தவரிடம் பழகும் பொழுது எச்சரிக்கை அவசியம்.

கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். எந்த ஒரு பிரச்சினையையும் பெரிதுபடுத்தாமல் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் சேர்த்து மேற்கொள்வது மிகவும் சிறப்பு. உங்களுடைய வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் அனைத்தும் குறைந்து சந்தோஷம் நிலைத்து இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |