Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அவசரம் வேண்டாம்…நிதானம் தேவை…!

 

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!   இன்று பெரியவர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தாமதமான பணி புதிய முயற்சியால் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்க பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். அமோகமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து தங்கள் உதவியாளருடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

நண்பர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். எந்தவித அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் பரவியிருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். வாகனம் மூலம் செலவு அதிகரிக்கும். அதே போல வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக தான் செல்ல வேண்டியிருக்கும்.

தடைப்பட்டிருந்த பணவரவு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகி மனமகிழ்ச்சி ஏற்படும். அதிக கோபம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |