ரிஷப ராசி அன்பர்கள், இன்று கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொந்தபந்தங்கள் பிரச்சனைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதமும் சிக்கலும் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் ஏதும் வேண்டாம். தடைகளை தாண்டித்தான் என்று முன்னேற வேண்டியிருக்கும்
கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் கொள்வீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனசுக்கு இதம் கொடுக்கும். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் கொஞ்சம் ஏற்படும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.
உத்யோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே ஓரளவு கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம், நீங்களும் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். விளையாட்டை தயவு செய்து எரங்கட்டி விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க க்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை