Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அலைச்சல் குறையும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!     இன்று சொந்த பூமியால் லாபம் கிட்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிப்பதற்கு  வாய்ப்புகள் இருக்கிறன. எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரக்கூடும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சால் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். சகோதரர் வழியில் ஏதாவது பிரச்சனை தலை தூக்கலாம். இன்று நான் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். கடுமையான வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த வேண்டாம். காதல் இன்று பொறுமையுடன் பேசுவது நல்லது. அவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் பேசி தீர்த்துக் கொள்வது மிகவும் சிறப்பு. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |