ரிஷப ராசி அன்பர்களே …! வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். இன்று வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனம்கொள்ளுங்கள். அலைபேசி தகவல் அனுகூலத்தை கொடுக்கும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது பொருளாதாரத்தில் நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
பணம் பத்திரமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். மனைவி மூலம் அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கொடுப்பதாகவும் ஓரளவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்லபடியாக இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லை இருந்தாலும் காதலர்கள் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்வது நல்லது. பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பு கொடுக்கும்.
அதே போல புதிய முயற்சிகளை இப்போதைக்கு மட்டும் வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்.