Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அமைதி காணப்படும்…இனிமையான நாள்…!

ரிஷப ராசி அன்பர்களே …!      இன்று எதிர் வருகின்ற சூழ்நிலை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கலாம். மனசாட்சி படி நடந்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் குளறுபடியை மாற்றி சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சகஜநிலை இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நட்பால் ஆதாயமடைவீர்கள்.

காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். அதே போல இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |