ரிஷப ராசி அன்பர்களே …! இன்று திட்டமிட்ட செல்களை நிறைவேற்றுவதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நீங்கள் நினைத்த இலக்கை எளிதில் அடைவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எல்லா காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டியிருக்கும்.
வரவேண்டிய பாக்கிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். அதேபோல புதிதாக முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். பொறுமை காப்பது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் சரியாகி விடும். காதல் மட்டும் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் தான் செயல்பட வேண்டியிருக்கும்.
இன்று குலதெய்வ வழிபாட்டை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.