Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… எண்ணம் மேலோங்கும்…ஆதாயம் கூடும் …!

ரிஷப ராசி அன்பர்களே …!  சிலர் உங்களை நம்பி மிகப் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடும்.  இதை விரிவுபடுத்த கூடிய எண்ணம் மேலோங்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் அடைய கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார்கள். ஓரளவு அமோகமான நாளாகத்தான் இருக்கும். இன்று பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்பட்டாலும் கவலை வேண்டாம். சரியான நேரத்திற்கு தன வரவு வந்து சேரும். புதிய ஆட்கள் கிடைப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்,  அதன் மூலம் நன்மை அடையக்கூடும். அலுவலக பணிகளில் தாமதம் கொஞ்சம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சீராகவே இருக்கும்.

ஆனால் சரியான உணவை எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். முக்கியமான பணியை இன்று நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. வெள்ளை எப்பொழுதுமே உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போல இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று சிறப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |