ரிஷப ராசி அன்பர்களே …! தனவரவு தாராளமாக வந்து சேரும். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான நபரை நீங்கள் சந்திக்க கூடும். எந்த ஒரு விஷயத்தையும் திறம்படவே செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று உழைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப்பளுவை சந்திக்கக்கூடும். பங்குதாரர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக தொழில் தொடங்க திட்டங்கள் தள்ளிப் போகும். பெண்கள் கணவரிடம் மிகவும் சகஜமாக செல்லவேண்டும். கூடுமானவரை பெண்கள் கணவரை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்னை வேண்டாம். இன்று தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.
காதலர்களுக்கு இனிமையான நாளாகவே இருக்கும். புதியதாக காதலில் விழக் கூடிய சூழலும் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.