ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பலம் கூடும் நாளாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். கடிதங்களும் பிற இனத்தாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொலைபேசி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். இன்று கல்வியில் தரம் உயரும். அதனால் மதிப்புக்கூட்டும்.
சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். வாழ்க்கையை புதிய பாதைக்கு இன்று எடுத்துச் செல்வீர்கள். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் உண்டாகும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.