ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சுமாரான பணவரவு உள்ள நாளாகத்தான் இருக்கும். ஆயினும் மனத்தில் சில சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். சிலருக்கு வழக்குகளால் பெட்டி செலவுகள் ஏற்படலாம். காரிய தடை ஏற்படும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சிகரமான தருணங்களாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இன்று கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு உன்னதமான நாளாக இருக்கும். அதே போல் செய்தொழில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். அதிக வாய்ப்பு கிடைக்கக் கூடிய சூழல் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை மட்டும் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும்.
வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாகத் தான் செல்ல வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.