Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…தைரியம் கூடும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தை ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. இன்று கட்டுமான பணிகளும் ஓரளவு எளிதாகவே காணப்படும்.

மன தைரியம் அதிகரிக்கும். யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் மிகுந்து காணப்படும். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |