Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…உடல் சோர்வு ஏற்படும்…தனவரவு உண்டாகும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் உதவி, புதிய வேலைவாய்ப்பு, சாஸ்திர மந்திர வித்தைகளில் தேர்ச்சி ஆகியவை ஏற்படும். தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. ஏதேனும் மனகஷ்டம் அவ்வப்போது வந்து செல்லும்.

வீண் செலவுகள் கூட இருக்கும். உடல் சோர்வு கொஞ்சம் வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் ஓரளவே சாதகமான பலனைப் பெறமுடியும். தனவரவு கூட கால தாமதத்துடன் உங்களிடம் வந்து சேரும். இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். நிதானத்தை கடைபிடித்து தான் ஆக வேண்டும். புதிதாக நபர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆகும் பட்சத்தில் கொஞ்சம் அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |