ரிஷப ராசி அன்பர்களே …! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள் ஆகியிருக்கும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும் வகையில் அமையும். உச்சத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரணையால் சந்தோஷம் கொள்வீர்கள்.
இன்று உயர்வான சிந்தனை மேலோங்கும். கொடுக்கல் வாங்கலும் நல்லபடியாகவே நடந்தும் முடியும். புதியதாக எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். செய்யக்கூடிய தொழிலில் வருமானம் இருமடங்காக இருக்கும். பயணங்கள் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரிடமும் எந்தவித பாதகங்கள் மட்டும் செய்யாதீர்கள். காதலர்களுக்கு ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திருமணத்திற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.