ரிஷப ராசி அன்பர்களே …! இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
அதுபோலவே உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பரிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். எதையும் இன்றும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். இன்று உடல்ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.