ரிஷப ராசி அன்பர்களே …! இன்று செயல்களில் தற்காப்பை பின்பற்ற வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை தயவு செய்து கொடுக்க வேண்டாம். தொழிலில் உருவாகிற குளறுபடியை சரி செய்வது ரொம்ப நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல் நலத்தை சீராக்க உதவும். புத்தி சாதுர்யத்துடன் காரியங்கள் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும்.
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். சொத்து சம்பந்தமான எந்த காரியம் செய்தாலும் தாமதம் கொஞ்சம் உண்டாகும். சில காரியங்கள் காலதாமதமாக தான் நடந்து முடியும். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முக்கியமான பணியை செய்யுங்கள். அதேபோல உங்களுடைய மனைவியிடமும் ஆலோசனை கேட்டு காரியத்தைச் செய்யுங்கள். சகோதரர்கள் ஒத்துழைப்பு இன்று இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.