Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…மனநிறைவு கிட்டும்…செயல்திறன் அதிகரிக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!  இன்று குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவிகளை செய்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாளாக இன்றைய நாள் இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.

லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவரின் செயல்திறனும் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலனை இன்று கிடைக்கும். தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். வாக்குறுதிகளையும் நீங்கள் நிறைவேற்றி விடுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் மிகச் சிறப்பாகவே நடந்து கொள்வீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்து கொள்வீர்கள்.

காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |