Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…சொத்து பிரச்சினைகள் நீங்கும்…எதிலும் வெற்றி உண்டு…!

ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பயணத்தால் ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு இன்று அனைத்து விஷயங்களும் ஈடுபடுபவீர்கள். புதிய நபர்களின் சந்திப்பு இருக்கும். பிரபலமானவர்களின் சந்திப்பு இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். திடீர் கோபம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். மற்றவரிடம் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. நண்பர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவரிடம் அனுசரித்து பேசவேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும்.

கோபத்தை முற்றிலும் தவிர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பிடிவாத குணத்தை இன்று விட்டு விட்டான் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு தேவையில்லாமல் ஆளாக நேரலாம்.  எதிலும் கவனம் கொள்ளுங்கள். எதிலும் திருப்தி இல்லாத மனநிலையை இருக்கும்.

காதலர்களுக்கு மட்டும் நிதானமாக இருக்க வேண்டும். பேச்சிலும் கண்டிப்பாக நிதானம் வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |