ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும் செல்வ நிலை சீராகவே இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு போன்ற செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணங்கள் அனுகுல பலன் கிடைக்கும். இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இன்று கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு காணுங்கள். அது உங்கள் எதிர்காலத்துக்கு உதவும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் பெரும் தகராறு கொஞ்சம் பிறக்கும். முன் கோபத்தை தயவுசெய்து கைவிடுங்கள். நிதானமாக எதையும் செய்யுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேல் அதிகாரிகளுக்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை கொஞ்சம் உண்டாகலாம் கவனம் ஆகவே இருங்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். காதலர்கள் இன்று பேச்சு கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.