ரிஷப ராசி அன்பர்களே …! இன்று உதவிகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்க செய்யும். காரியங்களில் உங்களுடைய திறமை மேம்படும். சகோதர வழியில் சகாயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
பயணங்களால் செலவு கொஞ்சம் ஏற்படும். அதே போல பயணங்களின் பொழுது உடைமைகள் மீது கவனமாக இருங்கள். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் மட்டும் செய்யாமல் இருங்கள். அது போலவே உடல் உழைப்பு இன்று அதிகம் இருக்கும். கோபத்தை கண்டிப்பாக நீங்கள் கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும்.
இன்று செலவுகள் கூட அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.