ரிஷப ராசி அன்பர்களே …! இன்று தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சனைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சி மேற் கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். தெளிவான முடிவை எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பண வரவு சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கும் இன்று சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.