ரிஷப ராசி அன்பர்களே …! மற்றவர் செயல் உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. கூடுதல் முயற்சியால் வெற்றி கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். போக்குவரத்து கொஞ்சம் கவனமாக இருங்கள். காரியத்தில் தடை தாமதம் கொஞ்சம் ஏற்பாடும்.
புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும், கவனமாக செயல்படுவதும் ரொம்ப நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதுவானாலும் வரட்டும் பார்க்கலாம் என்று முரட்டு தைரியம் மட்டும் வேண்டாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.