Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…தடங்கல்கள் உண்டாகும்… தைரியம் கூடும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பயணங்களின் பொழுது ரொம்ப எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் கொஞ்சம் கடினம். உங்களுடைய பிடிவாத குணத்தை மட்டும் தயவு செய்து தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காணமுடியும். மன தைரியம் கூடினாலும் பழைய சம்பவம் நினைவால்  மகிழ்ச்சி குறையும்.

இன்று எந்த ஒரு விஷயத்திலும் அக்கறை வேண்டும். திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி சில தடங்கல்கள் உருவாகலாம். உதவிகள் செய்யும் பொழுது யோசித்து செய்வது நல்லது. கூடுமானவரை இன்று பொறுமையை கடைபிடிக்க  வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். அக்கம் பக்கம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |